திங்கள், 1 மே, 2017

பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடு.

தொடக்கக் கல்வித்துறை பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கவுன்சிலிங் மே 19 ல் துவங்கி மே 29 வரை நடக்கிறது.  
இதற்கான விண்ணப்பங்கள் ஏப்., 24 முதல் மே 5 வரை பெறப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சிலிங் மட்டும் இணையதளம் வழியாக நடந்தது. இந்த ஆண்டு அனைத்து மாறுதல்களும் இணையதளம் வழியே நடக்க உள்ளன.
கடந்த காலங்களில் ஒருவர் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என, மூன்று மாறுதல்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த ஆண்டு ஏதாவதொன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
 
மேலும் கடந்த காலங்களில் பொதுமாறுதல் கவுன்சிலிங் அன்று முன்னுரிமை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தால்போதும். இதில் சிலர் சமர்ப்பித்த ஆவணங்களில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஆவணங்களை முன்கூட்டியே ஆய்வு செய்யும் வகையில், விண்ணப்பிக்கும்போதே அவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக