புதன், 3 மே, 2017

வேலம்மாள் மருத்துவமனை .

5 ஸ்டார் ஹோட்டல் போலக் காட்சி அளிக்கிறது மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்துச் செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.

ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்தது 4
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்குதான் முதலில் கண்டேன்.

எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் ஃபீஸ் கிடையாது.

2. அட்மிஷன்  ஃபீஸ் கிடையாது .

3. அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4. x-ray கட்டணம்  50 ரூபாய், ஒரு Digital ECG கட்டணம் 65 ரூபாய், வீடியோ எண்டோஸ்கோப்பி கட்டணம் 2000 ரூபாய்.

5. ஆபரேஷனுக்குக் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கிக் கொடுப்பதுதான். அதிலும் 8% தள்ளுபடி.

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டியதாக இருந்தது. இதற்குக் கட்டணம் -------

Appoloவில் ஒன்றரை லட்சம் ரூபாய். போரூர் ராமச்சந்திராவில் 84,000 ரூபாய்.  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000 ரூபாய். . ஆனால் இங்கு ஆன செலவு 13,500 ரூபாய். மட்டுமே. அதுவும் Scan, ECG, மருந்துகள் என சகலமும் சேர்த்து.

 திருச்சியில் இருந்து வெறும் 2 மணி நேரம் பஸ் பயணம். சேவை மனப்பான்மை என்று எவ்வளவோ இருந்தாலும் எனக்கு என்னவோ இது தான் சிறந்ததாகத் தெரிகிறது. இது மக்களுக்கான மருத்துவமனை.

உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் ..  பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.

வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.
FORWARDED AS RECEIVED.
PLEASE CHECK UP THE GENUINENESS OF THE INFORMATION.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக