சனி, 6 மே, 2017

வாட்ஸ்அப்-ன் இந்த வசதிகள் பற்றி தெரியுமா! #WhatsApp .

காலையில் கண்விழித்ததும்முதல் வேலையாக வாட்ஸ்அப்திறந்து செய்திகளைப்படிப்பவர்கள் தான் அதிகம். 
ஸ்மார்ட்போன்வைத்திருப்பவர்களில் பலரும்கண்ணாடி பார்க்காமல் கூட ஒருநாளைக் கழித்துவிடுவார்கள். ஆனால் அவர்களால் வாட்ஸ்அப்
பார்க்காமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது. அலுவலகத்தில்பணிபுரிபவர்கள், நண்பர்கள்மற்றும் உறவினர்களுடன்வாட்ஸ்அப் வழியாகதான்அதிகம் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறோம். வாழ்வின் ஓர்அங்கமாக மாறிவிட்டவாட்ஸ்அப்பில் உள்ள இந்த ஆறுவசதிகள் பற்றித்தெரியாவிட்டால் அவசியம்தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் பாதுகாப்பைஅதிகப்படுத்துங்கள் :
வாட்ஸ்அப் பயன்படுத்தயூசர்நேம், பாஸ்வேர்டு எதுவும்தேவையில்லை என்பதைஅறிவீர்கள். மொபைல்எண்ணுக்கு வாட்ஸ்அப்அனுப்பும் ஒன்-டைம்பாஸ்வேர்டு குறுஞ்செய்திஇருந்தால் வேறு யார்வேண்டுமானாலும் உங்கள்வாட்ஸ்அப் அக்கவுன்ட்டைப்பயன்படுத்தும்வாய்ப்பிருக்கிறது. மொபைல்தொலைந்து போகும் பட்சத்தில், மொபைல் லாக்செய்யப்பட்டிருந்தாலும் கூட சிம்கார்டை வைத்து வேறு எவர்வேண்டுமானாலும் உங்கள்வாட்ஸ்அப் தகவல்களைஅக்சஸ் செய்ய முடியும். இதைத்தடுப்பதற்காக, சமீபத்தில்இரண்டடுக்கு பாதுகாப்பைவாட்ஸ்அப் கொண்டுவந்தது.
முதலாவதாக வாட்ஸ்அப்செட்டிங்ஸ் சென்று, அக்கவுன்ட்ஆப்ஷனில் உள்ள டூ-ஸ்டெப்வெரிஃபிகேசனில் ஆறு இலக்கபாஸ்வேர்டு மற்றும் மெயில்ஐடியைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். அதன்பின்வாட்ஸ்அப் அப்ளிகேஷனைமீண்டும் இன்ஸ்டால்செய்தாலோ அல்லதுசரிபார்த்தாலோ ஆறு இலக்கபாஸ்வேர்டு கொடுத்தால் தான்அக்கவுன்ட்டைப் பயன்படுத்தமுடியும். ஒருவேளைபாஸ்வேர்டை மறந்தால் இ-மெயில் ஐடி மூலம், பாஸ்வேர்டை திரும்பப்பெற்றுக்கொள்ள முடியும்.
வாய்ஸ் நோட் கேட்க இயர்ஃபோன் தேவையில்லை!
வாட்ஸ்அப்பில் டெக்ஸ்ட் செய்திகளைப் போலவே, ஒலிப்பதிவு செய்த வாய்ஸ் நோட்களும் அதிக அளவில் அனுப்பப்படுகின்றன. வாய்ஸ் நோட்கள் பொதுவாக ஸ்பீக்கர் மோடில் தான் ஓப்பன் ஆகும். அருகே ஆள்கள் இருந்தால் ப்ரைவசிக்காக வாய்ஸ் நோட்டைக் கேட்க இயர்ஃபோனைத் தேடி ஓடுவோம். வாய்ஸ் நோட் செய்திகளைக் கேட்க இயர்ஃபோன் தேவை இல்லை என்கிறது வாட்ஸ்அப். ஒலித்தகவலை ப்ளே செய்து காதின் அருகே கொண்டு சென்றதும், தானாகவே ஸ்பீக்கர் மோடில் இருந்து ஹேண்ட்செட் ஸ்பீக்கரில் ஒலிக்க ஆரம்பிக்கும். சிம்பிள்!
வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள வசதிகள் :
அலுவலக விஷயங்களுக்காகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் உரையாடல் மேற்கொள்ள வாட்ஸ்அப் குரூப் வசதி பயன்படுத்தப்படுகிறது. குரூப்களில் ஒரே நேரத்தில் எண்ணற்ற செய்திகள் வந்துகொண்டே இருக்கும் என்பதால், முக்கியமான செய்தியை மட்டும் புக்மார்க் செய்துகொண்டால் பின்னர் அவற்றைத் தேடுவது சுலபம். புக்மார்க் செய்ய வேண்டிய  முக்கியமான செய்தியை லாங் ப்ரெஸ் செய்து, மேலே காண்பிக்கப்படும் ஸ்டார் பட்டனை கிளிக் செய்து எளிதாக புக்மார்க் செய்து கொள்ளலாம். மெனுவில் இருக்கும் ஸ்டார்டு மெசேஜஸ் (Starred Messages) என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, புக் மார்க் செய்த மெசேஜ்களை மட்டும் மீண்டும் எளிதாகப் படித்துக்கொள்ள முடியும்.
இதே போல், குரூப்பில் உள்ள ஒரு தனி நபரை மென்சன் செய்து செய்தி அனுப்ப விரும்பினால், '@' என டைப் செய்து, அதன்பின் அந்த நபரின் பெயரை டைப் செய்தால் அவருக்குத் தனியாக நோட்டிஃபிகேசன் செல்லும். அவரும் அந்த செய்தியைத் தவறவிடாமல் வாசிக்க முடியும்.
ஒரு செய்திக்கு மட்டும் குறிப்பிட்டு ரிப்ளை செய்ய விரும்பினால், அந்த செய்தியை லாங் ப்ரெஸ் செய்தால், நோட்டிஃபிகேசன் பாரில் 'ரிப்ளை' ஐகான் தோன்றும். அதை கிளிக் செய்தபின் செய்தி அனுப்பினால், பழைய செய்தியோடு ரிப்ளையும் திரையில் தோன்றும்.

எழுத்துருக்களை மாற்றலாம் :
வாட்ஸ்அப்பில் அனுப்பும் செய்தியின் எழுத்துருவை மாற்றும் வசதி பலருக்கும் தெரிந்திருக்கக் கூடும். குறிப்பிட்ட வாக்கியத்தை மட்டும் தடிமனாக (Bold) எழுத அந்த வாக்கியத்தின் தொடக்கத்திலும் முடிவிலும், இடைவெளி இல்லாமல் '*' என்ற குறியை டைப் செய்து அனுப்ப வேண்டும். இதே போல இத்தாலிக் ஸ்டைலில் எழுத, '_' என டைப் செய்ய வேண்டும். வாக்கியத்தின் குறுக்கே கோடு கிழிக்க (Strike through) விரும்பினால், '~' என்ற குறியை டைப் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக