செவ்வாய், 31 அக்டோபர், 2017

அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதில் நடுநிலையுடன் செயல்பட அரசுத் தேர்வு இயக்குநர் அறிவுறுத்தல்!!!


TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பார்வையற்ற மாணவர்களுக்காக 'டெய்சி' செயலி! பாடங்களை வாசித்துக் காட்டுவதால் மகிழ்ச்சி.

பொதுத்தேர்வு எழுதும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, பாடப்புத்தகங்களை வாசித்து காட்டும், 'டெய்சி' என்ற செயலியை, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட, பயிற்சி வகுப்பில், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன.
அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு, செப்டம்பரில் நடந்த துணை தேர்வு முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. 

அரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு.

அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகள் துவங்கின.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கான பணிகளில் உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. கலை அறிவியல் கல்லுாரிகளில் 3500, இன்ஜி., பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆறு மாதத்துக்கு ஒரு முறை இவர்கள் புதிய பணி அமர்த்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

கனமழை: இன்று (அக்.,31) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

  • விழுப்புரம் ,
  • காஞ்சிபுரம், 
  • திருவள்ளூர் ,
  • சென்னை ,
  • நாகை,
  • கடலூர்: 9 ஒன்றியங்களுக்கு ( கடலுார், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோயில், பண்ருட்டி, குமராட்சி, புவனகிரி, அண்ணாகிராமம், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை  )

தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்:அண்ணா பல்கலை . அறிவிப்பு

அக்.31 திட்டமிட்டபடிதேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. கனமழையை தொடர்ந்து தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவு எடுக்கப்படவில்லை என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

திங்கள், 30 அக்டோபர், 2017

TNPSC - DEC-2017-ல் நடைபெறும் துறை தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன.

TNPSC:DEC-2017-ல் நடைபெறும் துறை தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன

விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17
 புதிய பாட திட்டத்தின்படி

கல்வித்துறை அமைச்சுப்  பணியாளா்கள்* எழுத வேண்டிய தாள்கள்

பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கியது போல், பொதுத் துறை ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு  உத்தரவிட்டு உள்ளது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, தமிழகத்தில் அமல்படுத்த, தகுந்த பரிந்துரைகள் வழங்க,  அலுவலர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. 

தனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை - DEEO செயல்முறைகள்.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு.

நாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ராணுவம், துணை ராணுவம் உட்பட, பணி இடமாற்றம் செய்யப்படும் பணியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஒரே கல்வி முறையை வழங்கும் வகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றை தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் முதல், இந்த தவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

சென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்.

சென்னை பல்கலையில், 'கிரேடிங்' என்ற, படிநிலை முறை கொண்டு வரப்படுவதோடு, ஆன்லைன் தேர்வும் அறிமுகம் ஆகிறது. சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்ற தரமதிப்பீட்டு முறை, நடைமுறையில் உள்ளது. ஆனால், பள்ளிகள், கல்லுாரிகளில் தர மதிப்பீட்டு முறை மாறி, தற்போது, கிரேடிங் முறை அறிமுகமாகி உள்ளது.

ஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்.

ஆதார் பதிவு மையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்படுவதை அடுத்து, ஆதார் பதிவுகளை, அரசு ஊழியர் ஒருவர், தன் விரல் ரேகையை பதிவு செய்து, உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம், மக்களிடம், 'பயோமெட்ரிக்' முறையில் தகவல்களை பெற்று, பதிவு செய்தல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை, தனியார் ஏஜன்சிகள் மூலம் செய்து வருகிறது. இவை, தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வருவதால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த  ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். 

குமரி மாவட்டத்தை சேர்ந்த குமரி மகாசபா செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல்  செய்திருந்தார். அதில் ‘கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் 1986ல் ஜவஹர்  நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு தொடக்கம்!

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு இன்று (அக்டோபர் 28) காலை தொடங்கியது.
சென்னையில் மூன்று மையத்தில் 763 பேர் உட்பட நாடு முழுவதிலுமுள்ள 24 மையங்களில் 13,350 பேர் மெயின் தேர்வை எழுதியுள்ளனர். இன்று தொடங்கிய இத்தேர்வு நவம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும்.

40,000 ரூபாய் சம்பளத்தில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை!!!


தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் M.phil பயில்வதற்கான விண்ணப்பம்!!! (TNOU -CHENNAI)

வாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு.

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர் பட்டியலுடன், வாக்காளர்களின், 'ஆதார்' எண்களை இணைக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. அதற்கான அனுமதியை, உச்ச நீதிமன்றத்திடம் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நகர பகுதிகளில், வாடகை வீட்டில் வசிப்போர், அவ்வப்போது வீடு மாறுகின்றனர். 

சனி, 28 அக்டோபர், 2017

ரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.

நியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயருகிறது. புதிய சர்க்கரை விலை நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தற்போது ரூ.13.50 விலையில் விற்கப்படும் ஒரு கிலோ சர்க்கரை ரூ.25 ஆக விலை உயர்ந்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. 

'தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை'.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், தேர்வுகளுக்கான கால அட்டவணை குறித்து, சென்னையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
 
இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், ''தமிழ் வழி கல்வி கற்றோருக்கு, தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில், உரிய முன்னுரிமை வழங்கப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.

DEE PROCEEDINGS- புதிய பள்ளிகள் தொடங்க புதிய கருத்துருக்கள் கோருதல் சார்பு.

DEE PROCEEDINGS- DEEO /AEEO அலுவலக பணியாளர்களுக்கான அம்மா தமிழ் மென்பொருள் பயிற்சி கூட்டம் சென்னையில் நடைபெறுதல் சார்பு.


எம்.பில்., - பிஎச்.டி., 'அட்மிஷன்' துவக்கம்.

சென்னை: எம்.பில்., மற்றும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை அறிவித்துள்ளது.

பல்கலை அறிவிப்பு: மத்திய அரசின், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியின்படி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புக்கு, நேரடியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்கான, இளநிலை ஆராய்ச்சி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் சேரலாம்.

316 அரசு மருத்துவர்களுக்கான பணிநியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்!!!.

தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் 
பணியமர்த்தப்பட்டுள்ளனர் - முதலமைச்சர் பழனிசாமி.

தமிழகத்தில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைய காரணமானவர் ஜெயலலிதா - முதலமைச்சர்.

22,358 பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டுள்ளது, உதவி மருத்துவ பணியிடங்கள் படிப்படியாக உயர்ந்து வருகிறது - முதலமைச்சர்

அரசாணை எண் 573 பள்ளிக்கல்வி நாள்:03.10.2017- அரசு தேர்வுகள் இயக்ககம்- மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு- தனித் தேர்வர்களை தேர்விற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை!!



பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது.
இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது.

பிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு.

பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதிப்பெண் முறையும், 200லிருந்து, 100 ஆக மாற்றப்பட்டுள்ளது. 

26.10.2017 முதல் 28.10.2017 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை!

காஞ்சிபுரம் CEO செயல்முறைகள்-26.10.2017 முதல் 28.10.2017 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தலைமையாசிரியர்கள் கீழ்கண்ட ஆணையின் படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 

வெள்ளி, 27 அக்டோபர், 2017

எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வு: மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்; அரசு தேர்வுகள் இயக்குனர் தகவல்.

செப்டம்பர், அக்டோபர்–2017 எஸ்.எஸ்.எல்.சி. துணை பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உள்பட) தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். 

மேலும், துணை தேர்வுக்கான மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு 31.10.2017 மற்றும் 1.11.2017 ஆகிய 2 நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ML Regarding - மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

அரசு கடித எண்:64435/FR-V/94-5 


நாள்:27/03/1995

மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் 
பிற அரசு விடுமுறைநாட்களை பின் இணைப்பாகக் கருதிட 
அனுமதி பெற்றால் போதுமானது.

மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி, ஞாயிறு 
மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட 
அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

பள்ளி மாணவ / மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பை வலியுறுத்தி 30.10.2017 அன்று போட்டிகள் நடத்துதல் குறித்த அரசாணை : 298, நாள் 09.10.2017


எம்.பில்., - பிஎச்.டி., 'அட்மிஷன்' துவக்கம்.

சென்னை: எம்.பில்., மற்றும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை அறிவித்துள்ளது.

பல்கலை அறிவிப்பு: மத்திய அரசின், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியின்படி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புக்கு, நேரடியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்கான, இளநிலை ஆராய்ச்சி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் சேரலாம்.

போராட்டத்தில் ஈடுபட மாற்றுத்திறனாளிகள் முடிவு.

சென்னை: 'மாற்றுத்திறனாளிகளை, அரசு அதிகாரிகள் தொடர்ந்து வஞ்சித்தால், போராடுவதை தவிர வேறு வழியில்லை' என, மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தொடக்கப் பள்ளிகளுக்கு இலவச நூலகம் உடனே இந்த இணைப்பில் விண்ணப்பம் செய்யவும்!!

அனைத்துப்பள்ளிகளிலும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி - 31.10.2017 அன்று எடுத்துக்கொள்ள முதன்மைச் செயலாளர் உத்தரவு.


வியாழன், 26 அக்டோபர், 2017

OBC சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சம் என உயர்த்தி மாநில அரசு ஆணை.

ஆணை நகல்-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

'கேட்' தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

எம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐ.ஐ.எம்., என்ற இந்திய மேலாண்மை உயர்கல்வி நிறுவனம் போன்ற நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்பில் சேர, 'கேட்' என்ற பொது மாணவர் சேர்க்கை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வரும் கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., சேர்க்கைக்கான, 'கேட்' தேர்வு, நவ., 26ல் நாடு முழுவதும், ஒரே நாளில் நடக்கிறது.இந்த தேர்வில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான, ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள், https://iimcat.ac.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

மனை வரன்முறை விதிமுறைகள் வெளியீடு.

தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனை வரன்முறை திட்டத்திற்கான, ஒருங்கிணைந்த விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், 2016 அக்., 20 முன் உருவான அங்கீகாரமில்லா மனைகள், மனைப்பிரிவுகளை, வரன்முறை செய்வதற்கான அரசாணை, மே, 4ல் பிறப்பிக்கப்பட்டது.

ஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்.

மொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நாடு முழுவதும், 100 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன.

வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை.

பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை, சில தினங்களில் தீவிரம் அடையும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். 
அதில், பருவ மழையால் எந்த விபத்தும், பள்ளி வளாகங்களில் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

சர்வதேச தரத்தில் உருவாகிறது 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்பு பாடத்திட்டம்.


புத்தகங்களை கொடையாக பெறும் திட்டம் துவக்கம்!!!

புதன், 25 அக்டோபர், 2017

புதிய ஊதியம் நிர்ணயம் செய்கையில் ஆசிரியர்கள் விருப்பம் ( options ) கவனிக்க வேண்டியவைகள் நான்கு:

1. 01.01.2016 இல் விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்வது .

NTSE EXAM 2017 - தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வுமையங்கள் மற்றும் தேர்வர்கள் பட்டியல் வெளியீடு. | EXAM DATE : 04.11.2017.


ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வாங்கியான ரிசர்வ் வங்கியின் பல மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் காலியாக உள்ள 623 "அசிஸ்டன்ட்" பணியிடங்களுக்கு விண்ணப்பிதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு தேசிய அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இந்த எழுத்துத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

இனி பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இரண்டு டைம்லைன்... வருகிறது புதிய வசதி!

இனி பேஸ்புக்கில் ஒரு டைம்லனுக்கு பதிலாக இரண்டு டைம்லைன்களை மக்கள் பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்றபடி விரைவில் இந்த ஆப் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் - CEO உத்தரவு.

அனைத்துப் பள்ளிகளிலும் இனி வியாழக்கிழமைதோறும் மாணவர்கள் 

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு.

TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு - தமிழக அரசின் கருணைப் பார்வைபட்டால் அனைத்து வழக்குகளுக்கும் முழு தீர்வுக்கு வாய்ப்பு.

கட்டட உறுதி சான்று : பள்ளிகளுக்கு எச்சரிக்கை.

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், கட்டட உறுதி சான்று இல்லாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 24 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 7,000 நடுநிலைப் பள்ளிகள், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

போட்டித்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

சென்னை தேவநேய பாவாணர் அரங்கத்தில் புத்தக பதிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அரிய புத்தகங்களை பெறும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:–

செவ்வாய், 24 அக்டோபர், 2017

தரம் உயர்த்தப்பட்ட EXPRESS PAY ORDER -விரைவில்!

DSE : 2017-2018-தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலை பள்ளிகளுக்கு அரசிடமிருந்து EXPRESS PAY ORDER -விரைவில் பெற்று வழங்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.

முதுநிலை, 'நீட்' தேர்வில் மாற்றம் : நாடு முழுவதும் ஜன.,7ல் தேர்வு

முதுநிலை, 'நீட்' தேர்வு, நாடு முழுவதும், ஜன.,7ல், ஒரே நாளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிக்கவும்; பி.டி.எஸ்., படித்தவர்கள், எம்.டி.எஸ்., படிக்கவும், மத்திய அரசின் முதுநிலை, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோருக்கான, 'நீட்' தேர்வு தேதியை, தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

சித்தா மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்.

சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.        தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, அரசு மற்றும் தனியார் கல்லுாரி களில், 1,216 இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. 

வேலைவாய்ப்பு பதிவை 2011 ம் ஆண்டிலிருந்து புதுப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு நவம்பர் 21-க்குள் புதுப்பிக்கலாம்.



இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

7th Pay Fixation For Elementary H.m | AEEO PROCEEDINGS (NEW)

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் ஊதிய நிர்ணயம் குறித்து(Pay fixation for Ele- hm) உதவி தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

SSA--SMC Meeting ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும் மற்றும் SMC MEETING வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு - SPD PROCEEDINGS.


Whatsapp கொண்டுவந்திருக்கும் புதிய அதிரடி மாற்றங்கள்...

வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்தநிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும்.

அரையாண்டு மாதிரி தேர்வு நவம்பர் 13ல் துவக்கம்.

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ., 13முதல்,அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, அனைத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, 

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10,12-ம் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்.

சிபிஎஸ்இ முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் உத்தரவு அமலுக்கு வரும் என அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ சுற்றிக்கை அனுப்பியுள்ளது

மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆதார் இல்லாதவர்கள் ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பித்த எண்ணை ஆன்லைனில் பதிவேற்றலாம்.

JEE EXAM - 2018 மெயின் தேர்வு அறிவிப்பு!!!

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்விநிறுவனங்களில், பிஇ, பிடெக் போன்ற இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சிபிஎஸ்இ நடத்தும் ஜேஇஇ (ஜாயின்ட் என்டரன்ஸ் எக்ஸாமினேஷன்) பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு தேதியை சிபிஎஸ்சி அக்டோபர் 20 அன்று அறிவித்தது.

மதுரை காமராஜ் பல்கலை பி.எட்., படிப்பு உடனடி சேர்க்கை.

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை கூறியதாவது:
இப்பல்கலை தொலைநிலை கல்வி சார்பில் பி.எட்., உடனடி மாணவர் சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 -2019 ஆண்டு சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ளவர்களுக்கு அக்., 26, 27 மற்றும் அக்.,30 முதல் நவ.,3 வரை உடனடி சேர்க்கை நடக்கிறது.

திங்கள், 23 அக்டோபர், 2017

புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளிலும் இலவச நூலகம்: தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைஊக்குவிக்கவும், அறிவாற்றலை பெருக்கவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது.

 
பொது நூலகத்துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்திட்டம் வேலூர், விழுப்புரம், கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.ஆனால் பல மாவட்டங்களில் மைய நுலக அதிகாரிகள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டனர். இந்நிலையில் தற்போது இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

'கொசு வந்தது; டெங்கு வந்தது' : பள்ளிகளில் ஓவிய போட்டி.

'கொசு வந்தது; டெங்கு வந்தது' என்ற தலைப்பில், பள்ளிகளில், ஓவியப்போட்டி நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் ஆகிய வற்றின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி என, 131 வகை தலைப்புகளில், போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உலகளவில் சிறந்த உணவாக உருவெடுத்து வரும் இட்லி.

தமிழகம் உட்பட, தென் மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற உணவான, இட்லி, உலகம் முழுவதும் விரும்பப்படும் உணவாக உருவெடுத்து வருகிறது.

தமிழகத்தில், பெரும்பாலான வீடுகளில், விரும்பி உண்ணப்படும் உணவாக, இட்லி திகழ்கிறது. இட்லியும், அதனுடன் சாம்பார், சட்னியும், பாதுகாப்பான, உடலுக்கு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது.இதுகுறித்து, சென்னை, தாஜ் கோரமண்டல் ஓட்டல், தலைமை சமையலர், சுஜன் முகர்ஜி கூறியதாவது:

தாய், தந்தை சமாதி அருகில் ஆசிரியர் உடலை அடக்கம் செய்த மாணவர்! : நிஜமானது மாதா, பிதா, குரு.

போட்டி நிறைந்த உலகில், 'நம்மை விட அவன் வளர்ந்து விட்டானோ' என பொறாமை படாத ஒரே ஜீவன் ஆசிரியர் மட்டுமே! ஒரு குழந்தை, தாய், தந்தையை விட அதிக நேரம் செலவழிப்பது ஆசிரியரிடம்தான். எனவேதான், 'மாதா.. பிதா.. குரு... தெய்வம்..!' என்றார்கள்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

'ஸ்மார்ட்' கார்டு பெறாமல் அலட்சியம் 20 லட்சம் பேருக்கு ரேஷன், 'கட்'.

ஸ்மார்ட்' கார்டுக்கு, சரியான விபரம் தராமல் அலட்சியமாக உள்ள, 20 லட்சம் பேருக்கு, ரேஷன் பொருட்களை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. 

வங்கி கணக்கோடு ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயம் - ஆர்.பி.ஐ மீண்டும் விளக்கம்!!


TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Result.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 20.05.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது.

BE முடித்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் வேலை.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணியிடங்களுக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கேட்-2018 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Manager (Technical)

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு.

தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மற்றும் கணக்கியல் தேர்வுகளின் முடிவுகள் 23-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அசத்தல் கண்டுபிடிப்பு தாத்தா பாட்டி கூட இனி தாய்ப்பால் சாப்பிடலாம்!!!


7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்.

ஊதியஉயர்வுorஊதியநகர்வு

=========================

 1) வளரூதியம்(Increment)
      ===================
Increment கணக்கீட்டில் நாம்  3%கணக்கிடும்போது, அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான்  ஊதியஅணியில் (paymatrix) நமக்கான நிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது,
என்பதால் இனி Increment சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள
தேவை இல்லை.

மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை.

வரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வில் செல்பவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது எவ்வாறு? LEVEL எண் மாறுமா? மாறாதா? அரசாணை சொல்வது என்ன?

பதவி உயர்வில் செல்பவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது எவ்வாறு? LEVEL எண் மாறுமா? மாறாதா? அரசாணை சொல்வது என்ன?


சாதனை மாணவிக்கு ரூ.2.5 லட்சத்தில் சைக்கிள்.

காரைக்குடி:சாதிக்க திறமை இருந்தும் சாதனம் இல்லாததால், தேசிய அளவில் வெற்றி பெற முடியாமல் தவித்த, அரசு பள்ளி மாணவிக்கு, காரைக்குடி மக்கள் மன்றத்தினர், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளை வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம், ஸ்ரீதண்டாயுதபாணி அரசு உயர்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார் குணமணி என்ற மாணவி. பெற்றோரை இழந்த ஏழை மாணவி குணமணி, எட்டாம் வகுப்பு படித்த போது, மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் முதலிடம் பிடித்தார்.

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு CBSE அறிவிப்பால் உற்சாகம்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது. பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.

அக்., 23 முதல் சிறப்பு வகுப்பு : சுண்டல், பிஸ்கட் உண்டு.

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, அடுத்த வாரம் முதல், சிறப்பு வகுப்புகள் துவக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள,87 ஆயிரம் பள்ளிகளில், ௪௭ லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அவர்களில், ௧௮ லட்சம் பேர், 1௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கின்றனர். 

சனி, 21 அக்டோபர், 2017

பள்ளி பாடத்திட்டம் மாற்றம் : கருத்து கூற, 'ஆன் - லைன்' வசதி?

பள்ளி பாடத்திட்டம் குறித்து, தனியார் பள்ளிகள் கருத்து தெரிவிக்க, இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டு களாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. அதே போல, 1 - 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 

வாக்காளர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.

துளசி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் அற்புத நன்மைகள்!!!

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.

பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 623 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!*



வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2017-2018-ஆம்ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 623 (இதில் சென்னைக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு : அமைச்சர் செங்கோட்டையன்.

  1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


நவோதயா பள்ளி விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி…. இப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது, “லைவ் ஷேரிங்” எனப்படும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாம் எங்கு இருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதை நாம் படத்துடன் தெரிவிக்க முடியும், அத்துடன் நமக்கு வேண்டியவர்களுடன் சாட்டிங்கிலும் ஈடுபடமுடியும்.

'நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?

'நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.

'நீட்' தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது. 

பொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டு தேர்வு.

தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நலமாய் வாழ!!!

இவன் சி. கண்ணதாசன்
நவராத்திரி மற்றும் பூஜை நாட்களில், சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுப்பது என்பது இந்துக்களின் பண்பாடு.

விழாவானாலும், விருந்தானாலும், விருந்தோம்பலில் வெற்றிலை பாக்கிற்கு முக்கிய அங்கம் உண்டு. அது இல்லையென்றால் விருந்தோம்பல் முழுமையடையாது.

அன்பு.....

||| ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.

+ பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,

_ இந்த பழம் மிகவும் புளிப்பாக  உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

+ உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு,
_ இல்லையேப்பா,

#மரியாதை

ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.

திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.

எங்கும் காரிருள்,சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.

தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும்.

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்? அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார்.

அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

இந்த பூமியில் “ பூனை ” தான் அதிக மாயாஜால சக்திகள் கொண்ட விலங்கு என்று சொன்னால் நம்புவீர்களா, உண்மை தான்.

வளர்ப்பு பிராணிகளில் பூனைக்கு தான் இயற்கையாகவே மாயாஜால சக்திகள் அதிகம் இருக்கிறது.
.
நேர்மறையான ஆற்றல் தான் மாயாஜால சக்திகள்
.
ஆனால் பூனை முகத்தில் முழித்தால் அவ்வளவு தான் , பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை என்ற மூட நம்பிக்கைகள் காரணமாக பெரும்பாலும் யாரும் வீட்டில் வளர்க்க மாட்டார்கள். ஆனால் அது தவறான கருத்துக்கள்..

அறநீர்....

அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான்.

யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்....

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை. பக்த்தில் கடைகளும் ஏதும் இல்லை

தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்டுக்களையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது கால் தடுக்கிக் கீழே விழ கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் பக்கத்தில் இருந்த ஒரு குட்டையில் விழுந்தன

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது

நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?

கடவுள் : தாராளமாக கேள்

நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?

கடவுள் : சத்தியமாக!

எழுதியவர்க்கு என் வாழ்த்துகள் ...

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புலுக்கையை அ ள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம், திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம். 

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

10 செகண்ட் கதைகள்:

             ஸீட்
       தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட்  வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் தந்தை!
        =============

                தமிழன்டா
      சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்..."அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!"
           ===============

                  திருட்டு
         "பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க" எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், "திருடுறது தப்பு...'பென்சில் வேணும்'னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டு வந்திருப்பேன்ல!" என்றார் அப்பா.
          ===============

             பணம்
        பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்....இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத ஆசிரியை!
            =============

         பழ(ங்)கதை                "தம்பிதானே....விட்டுக்கொடுப்பா" என மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் பழநி மலைக்கோயில் வரிசையில் நின்றிருந்த தந்தை!
             ===============

               அக்கறை
         கோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு 'காணவில்லை' என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி!
          ===============

               விதி
        "துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட?" என்றான் சக கைதி. "செத்தவன் கத்திட்டானே!" என்று சோகமாகச் சொன்னான் கொலைகாரன்!
            =============

தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா பெரியார் ... என்று கேட்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்...

தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா  பெரியார்  ... என்று கேட்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்...

பார்த்தார் .. கோவிலை  பார்ப்பதற்கு முன் .. கோவிலை கட்டிய, அருள்மொழிவர்மன் என்ற அழகிய தமிழ்பெயரை விட்டுவிட்டு
ராஜராஜசோழன் என்று மாற்றிக்கொண்ட சமஸ்கிருத பித்தரை பார்த்தார் ...

அதே கோவிலில் தேவரடியார் என்கிற பெயரில் பெண்களை தாசிகளாக்கிய அவலத்தை பார்த்தார் ..

யார் முட்டாள்?

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.  அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.

வீட்டு தோசைக்கும் ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்...!?!

[7:46 PM, 10/11/2017] +91 99654 45191: வீட்டு தோசைக்கும் ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்...!?!🤔🤔

வெளக்குமாத்தால அடிச்சிட்டு மாவ ஊத்துனா ஓட்டல் தோசை

தோசைய போட்டுட்டு வெளக்குமாத்த எடுத்தா வீட்டு தோசை..!!!

🤣🤣🤣😂😂😂😜😜😜

🌷💞🌷: 👩🏻‍🎤👁
ஒரு மனைவியின் பார்வையில்:

உலகின் Perfect Man - அவளின் அப்பா...

உலகில் மிகவும் கஷ்டப்படுபவன் - அவளின் சகோதரன்

உலகின் மிக அதிர்ஷ்டசாலி - அவளின் அக்கா/ தங்கையின் கணவன்மார்கள்...

உலகத்திலேயே கஞ்சன், பொய்யன், அசடு.. Etc... etc... எல்லாம் அவளின் கணவன்...

😢😐😔😂😂🤣🤣

🌷💞🌷: நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.

டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
;) ;) ;)

🌷💞🌷: டாக்டர்... எனக்கு சுகரும், மனைவியும் ஒண்ணுதான்....!!!’’

‘‘எப்படிச் சொல்றீங்க..?’’

‘‘ரெண்டையும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்...’’
:( :( :(

🌷💞🌷: Girl: ஏண்டா காலைல இருந்து மிஸ்டுகால் குடுத்துட்டே இருக்கே....!!??!! 😠😠😠

👦:- Boy: மிஸ்டுகால் குடுத்தா நதியே இணையுதாம்...

நாம இணைய மாட்டோமானுதான்....!!! ;)

Girl:🔪🔫🔪🔫🔪🔫
;) ;) ;)

🌷💞🌷: Diplomatic answer 😜😜

Wife 😡, "Tell me...

Who is STUPID...??? You or Me....???"

Husband (Calmly),

"Everyone knows that,

You are so intelligent,

You will never marry a STUPID person...!!!"

😄😄😝😜😃😄😳😳😷😷
What a decent way to reply !
;) ;) ;)

🌷💞🌷: 😱😱
:( மனைவி: "கல்யாணத்துக்கு முன்னாடி சினிமா பீச் ஹோட்டல் எல்லாம் அழைச்சிட்டு போனீங்க,

கல்யாணத்துக்கு அப்புறம் ஏன் எங்கேயும் அழைச்சுட்டு போறதே இல்ல..." :(

கணவன்: "தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது பிரச்சாரத்துக்கு போவானாடீ ..."
😜😜

🌷💞🌷: 😄😄😄
சண்டை போட்டால் பேச மாட்டாளே என யோசிப்பவன் காதலன்

பேசினால் சண்டை வந்திருமோ என யோசிப்பவன் கணவன்

இதாங்க வாழ்க்கை....

😇😇😜😜😜

🌷💞🌷: போகும் போது கடைசியா என்னத்த கொண்டு போக போறோம்"??? என்ற நீண்டகால கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது....!!!

#ஆதார் கார்டு நம்பர்...😂😝🏃

🌷💞🌷: ஏண்டா நேத்து முழுதும் டல்லாயிருந்தே???

நேத்திக்கு புடவை வாங்கறேன்னு போய் என் தர்மபத்தினி ரூ. 20,000/- க்கு வாங்கிட்டு வந்திட்டா.....

சரி இன்னிக்கு ஏன் சந்தோஷமா இருக்கே.....???

அவ அந்த புடவய உன் பொண்டாட்டிக்கிட்ட காட்றதுக்கு போயிருக்கா....😃😜😜

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

உங்களால்சாப்பிடமுடிந்ததுமூன்றுஇட்லிதான்.

ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !

நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !

"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''

தெரிந்து மிதித்தாலும்........ தெரியாமல் மிதித்தாலும்....... மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

தெரிந்து மிதித்தாலும்........ தெரியாமல் மிதித்தாலும்....... மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.



 நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை................
 அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட ........................சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!

Nice line from Ratan Tata's Lecture- in London.

👉1.
Don't educate
your children
to be rich.
Educate them
to be Happy.
So when
they grow up
they will know
the value of things
not the price.

👉2.
"Eat your food

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.

அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது?

நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது.

காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்!

சற்றே யோசிக்கலாமே...

சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில்,  'அம்மா’  என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,
ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!  என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும்  எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை.

'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’  என்று சொன்ன  பாட்டி  வானிலை அறிவியல் படித்தது இல்லை.

"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள்.

"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி வேண்டும் என்றார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர்.

ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு.

ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.

மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும். தன் பையில் பொறாமையை சேர்த்துக் கொள்ளும்.

சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார்.

சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்.

அவனை அசைத்துப் பார்த்தார்.அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.

உலக விஞ்ஞானிகளையே வியக்கவைத்த தமிழர்கள் : இன்று வரை விளங்காத மர்மம்..,🔥

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இதோ தமிழனுடைய கண்டுபிடிப்புகளின், சாதனை பட்டியல்கள்….😇

🕍தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்

காந்தியின் முழுமையான பெயர் என்ன?

1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?
➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி
2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
➯ கரம் சந்த் காந்தி
3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன?
➯ புத்திலிபாய்

உங்க எண்ணம் போலவே தான் உங்க வாழ்வும் அமையும்:

வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகம் இருந்தும் எனக்கு வெற்றியே கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் அவர் வெற்றி பற்றிய எண்ணத்தோடு கூட இருக்கும் மற்ற எண்ணங்களையும் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

வாய் விட்டுச் சொல்லும் எண்ணங்கள் தான் முக்கியமானது என்றில்லை. பெரும்பாலான நேரங்களில் வாய் விட்டுச் சொல்லாத, வார்த்தையாகாத எண்ணங்கள் நம்முள்ளே வலிமையாக இருக்குமானால் அந்த வலிமையான எண்ணங்கள் தான் செயல்களாகும்.

அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை

அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை 👴🏻👩🏻

நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ..
எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா..💚

அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினாயே!!
அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்...

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.

என் மனைவி பூ கேட்டாள்,,

ஒரு பூந்தொட்டியே

வாங்கிக் கொடுத்தேன்..

'தாகமாயிருக்கு,
தண்ணீர் வேணும் என்று கேட்டாள்,,

ஆப்பிள் ஜூஸே
வாங்கிக் கொடுத்தேன்..

தோசை
வாங்கித் தாங்கன்னு கேட்டாள்..

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய🌿🌿🌿 குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்🌳🌲 முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.🌿🍃🌱☘

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை🚰🚰🚰 சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் 🌲🌳வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை🍃🥗🌿 வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள்🌿, பூக்கள்🌸, காய்கள்🎋 என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை💓 சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத்💔🖤💔🖤💗💗💗 தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்🍃🌿🌱 போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத்👨‍👩‍👧‍👦👬🚶🏻 தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ 🍤🍗🍖🍳உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.🍀🍃🌿☘🌱

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 🍃🌿🍃🌿1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப்💔 பிரச்னைக்கு முருங்கைக்கீரை🌿 மட்டுமின்றி, முருங்கைப்பூவும்🌸 மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில்🍶🍶 இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்🍊🍊🍊 பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில்🍌🍌🍌 உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில்🥕🥕🥕🥕 உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் 🥛🥛🥛🥛உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

ஒரு பெரியவர்,👴🏻 சுமாரா 95வயசு இருக்கும்..... அவர் தன்னோட பொன்டாடிய👵🏻 இன்னமும் 'Darling'.😍 'Honey'.😘 'Sweet heart'💖 ன்னு கூப்டாரு

😅😅ஒரு பெரியவர்,👴🏻 சுமாரா 95வயசு இருக்கும்..... அவர் தன்னோட பொன்டாடிய👵🏻 இன்னமும்  'Darling'.😍  'Honey'.😘  'Sweet heart'💖  ன்னு கூப்டாரு..... அதபாத்து நான் அவரு கிட்ட😳 கேட்டேன்..... "ஏங்கய்யா, எப்படி இந்த வயசுல கூட பொன்டாட்டிய இவ்வளவு பாசமா கூப்புடுரீங்க....??
அதுக்கு அவரு சொல்றாரு......
"தம்பி, அவ பேரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே மறந்து போச்சு....😐 அவ கிட்ட பேர கேக்க பயமா இருக்கு.....!!☹☹
பயபுள்ள எப்படி சமாளிக்குது பாரு.......😆😆😆😆😅😅😅

மூளை இருக்கா ????????

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி.

ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்..!!

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும்
உரையாடி கொள்கிறார்கள்..!!
#இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர்
கேட்கிறார்.

ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள
பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க
மறுக்கிறார்கள், கை குலுக்குவது
அப்படியொன்றும் தவறு இல்லையே...

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது!

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்"

ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்

பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்

ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

பதினாறு வகையான அர்தங்கள்.


1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

உலக அதிசயம் என்றால் என்ன?

 ஒன்று உருவான பின்
அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது
என்பது தான் உலக அதிசயம்.

👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால்
" ச, ரி, க, ம, ப, த, நி "
என்கிற ஏழு
இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் கல்லுக்குள் 7
ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக
அதிசயம்.

BOSS in office :

BOSS in office : Okay guys, today we are going to play a game.....

When I say a name of the fruit, you run to the right  side of the hall....

And when I say any color, you run to the left side of the hall....

நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்....


காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்....., காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!

இது என்ன நியாயம்????

கலகலவென சிரித்தான் இறைவன் 😃😃😃😃

தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;

தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா...

தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா  வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?

பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. எல்லா கடையிலயும் நிறைய C C TV காமரா வச்சுருக்காங்க...!

கவரிமான் எங்கு வசிக்கிறது..?

முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..?
எப்படி தற்கொலை செய்து கொள்ளும்?

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் .

என்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..

எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் இல்லாமல் வாழலாம்..

கிழக்கு திசை நோக்கி ஒருவர் அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும்.
மேற்கு திசை நோக்கி ஒருவர் அமர்ந்து சாப்பிட்டால் பொருள் சேரும்.
தெற்கு திசை நோக்கி ஒருவர் அமர்ந்து சாப்பிட்டால் புகழ் வளரும்.
வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது. அப்படி சாப்பிடுவதால் நோய் வரும்.

இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.

ஆணழகன்
#அப்பாவிற்கு_அழத்தெரியாது!!

⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!

⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!

என்னடா வாழ்க்கை இது என

#ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது.

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது.

 “இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?”

எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான்.

கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-

கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-

கணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!...

மனைவி: பொய் சொல்லாதே... என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!...

நிச்சயம் பண்ணும்  போது 100 பேரோட வந்தே!!...

கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“

👍கொஞ்சம் சிரிப்பு👍

😃 கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“

மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?

கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?

பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது.

1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை  வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.கணவன் மனைவி பிரிவு வராது.

2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போடாதீர்கள். பணம் காசு குறைவு ஏற்படும். அதுபோல் மனைவிமார்களும் புருஷனுடன் சண்டை போடக்கூடாது.