சனி, 13 மே, 2017

பிளஸ் 2 ரிசல்ட்: மார்க் குறைந்தால் கவலைப்படாதீங்க 104க்கு போன் பண்ணுங்க.

பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க 104 தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதன்படி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வில் வெற்றி பெற்றாலும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகி தவறான முடிவை நாடுகின்றனர்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாவதை முன்னிட்டு தேர்வில் தோல்வி அடையும் , குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தவறான முடிவை நாடாமல் இருக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்க 104 தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான உடன் பதற்றமடையும் மாணவர்கள் , பெற்றோர் தயக்கமில்லாமல் ஆலோசனை பெற 104 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதை முன்னிட்டு இதற்காக 104 மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றம், மனச்சோர்வில் இருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மனதத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
My Blogger Tricks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக