கலந்தாய்வு சார்பாக சில முக்கிய தகவல்கள்:
1.இந்த ஆண்டு அனைத்து கலந்தாய்வுகளும் online வழியில் நடைபெற உள்ளது.
2.கலந்தாய்வு விண்ணப்பங்கள் அளிப்பதற்கான தேதி 05.05.2017 உடன் முடிவுற்றது.
3.இன்று முதல் அதாவது 06.05.17 முதல் 10.05.17 புதன்கிழமை வரை ஆசிரியர்கள் அளித்த கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் இணையத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற உள்ளது.
4.இணையத்தில் பதிவு செய்யும்பணி நிறைவுற்ற பின்னர் 11.05.17 வியாழன் முதல் 13.05.17 சனிக்கிழமை வரை இணையத்தில் பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு ஆசிரியர்கள் சரிபார்த்து கையொப்பம் இட வேண்டும்.இதில் கவனமாக வட்டார செயலாளர்கள் ஆசிரியர்கள் உடன் இருந்து வழிகாட்டல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5.இந்த சரிபார்த்தலின் போது அனைத்து விபரங்களையும் (பெயர்,பதவி,பணியில் சேரந்த தேதி,மாறுதலில் பணியேற்ற நாள்)சரிபார்த்து கையொப்பமிட வேண்டும்.
6.தாங்கள் விண்ணப்பத்தில் அளித்த விபரங்களும் இணையத்தில் பதிவு செய்த விபரங்களும் ஒன்றாக உள்ளதா என்பதை சரிபார்த்து கையொப்பமிட வேண்டும்.
7.கையொப்பமிட்ட பின்னர் விண்ணப்பங்கள் இணைய வழியில் இயக்குநர் அலுவலகத்திற்கு இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இவ்வாறு இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் எந்த ஒரு திருத்தத்தையும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்திலோ,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திலோ செய்ய இயலாது.இயக்குநர் அலுவலகத்தில் மட்டுமே செய்ய இயலும்.எனவே இதில் கவனம் தேவை.
8.அஜாக்கிரைதையாக இருப்பின் கலந்தாய்வின் போது எந்த மாற்றமும் செய்ய இயலாது.
9.கலந்தாய்வைப் பொறுத்தவரையில் முதன்முறையாக அனைத்தும் இணையவழியில் நடைபெற உள்ளது.ஒரு ஆசிரியர் ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் மூன்றிற்கும் விண்ணப்பத்து இருந்து முதலில் ஒன்றியத்திற்குள் கலந்தாய்வில் ஆணை பெற்று விட்டால் மற்ற இரண்டிலிருந்தும் தானாக பெயர் நீங்கும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.ஒன்றியத்திற்குள் not willing தந்து விட்டால் அடுத்த கலந்தாய்வில் அதாவது ஒன்றியம் விட்டு ஒன்றியம் கலந்து கொள்ளலாம்.
10.முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சமீபத்திய சான்றுகள் இணைத்திருக்க வேண்டும்.
11.சென்ற ஆண்டு சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் பெற்றிருந்தால் தற்போது முன்னுரிமையில் பெற இயலாது.
12.மாறுதல் கலந்தாய்வு அட்டவணை படி முதலில் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும்.பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தைப் பொருத்தவரையில் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் உபரி இல்லை.எனவே பணிநிரவல் இல்லை.
13.இடைநிலை ஆசிரியர் உபரி பணியிடம் பணிநிரவல் கலந்தாய்வு உண்டு.உபரி ஆசிரியரைப் பொருத்தவரையில் ஒரு பள்ளியின் ஆசிரியர் மாணவர் விகிதம் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை வட்டார செயலாளர்கள் கவனத்தில் கொள்ளவும்.
14.உபரி பணி நிரவல் பொருத்தவரையில் குறிப்பிட்ட பள்ளிகளில் யார் பணியில் சேர்ந்த தேதியில்(அந்த பள்ளியில்)இளையவரோ அவரே உபரி.ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் நிலை ஏற்பட்டால் அந்த ஒன்றியத்தில் யார் இளையவரோ அவர் பணி நிரவல் செய்யப்படுவார்.
15.தற்போது காலிப்பணியிடங்கள் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை வட்டார செயலாளர்கள் சரிபார்க்கவும்.
16.முன்னுரிமை பட்டியல்,பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
17.நமது ஆசிரியர்கள் எவ்விதத்திலும் பாதிப்படையா வண்ணம் அவர்களுக்கு உதவிடுமாறு செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக