சனி, 6 மே, 2017

பிறப்பால் நீங்கள் யார்?

சிங்கங்களிடம்
பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..?

சிரித்தபடி ..!
பிறப்பால் நாங்கள் சிங்கங்கள்  என்றன ..!

நாய்களிடம்
பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..?

சிரித்தபடி ..!
பிறப்பால் நாங்கள் நாய்கள்  என்றன ..!


கழுதைகளிடம்
பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..?

சிரித்தபடி ..!
பிறப்பால் நாங்கள் கழுதைகள்
 என்றன ..!


பன்றிகளிடமும் கேட்டுவிட்டேன்
பிறப்பால் நீங்கள்  யார் என்று  ..?

சிரித்தபடி ..!
பிறப்பால் நாங்கள் பன்றிகள்
 என்றன ..!

மனிதர்களிடம்
பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..?

ஒருவன்
பிறப்பால் நான் இஸ்லாம் என்றான்.
..!

மறொருவன்
தான் பிறப்பால் கிறிஸ்தவன் என்றான்..!

இன்னொருவன்
பிறப்பால் தான் இந்து என்றான்..!

அனைவருக்கும் தெரியவில்லை
நாம் அனைவரும் மனிதர்  என்று...?

பிறப்பால் நாம் மனிதர் என்பதையும்
மறந்து...!

வாழும் வாழ்க்கையில் மனித நேயத்தையும் மறந்து.!

மத நேயத்தோடும் சாதி வெறியோடும் வாழும் மானம் கெட்ட மனித இனம்

மிருகத்துடன் ஒப்பிடக் கூட தகுதி  இல்லாதவர்கள்...!

இனி பிறக்கும் உயிர்களுக்காவது
நாம் மனிதர் என்பதையும் மனித
நேயத்தோடு வாழ வேண்டும்
என்பதையும் கற்றுக் கொடுப்போம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக