ஞாயிறு, 14 மே, 2017

சைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி.?

       உங்கள் மொபைலை காணவில்லை என்றால் உடனே பதற்றம் அடைய வேண்டாம், ஒருவேளை அது உங்கள் மிக அருகாமையிலேயே கூட இருக்கலாம், சைலன்ட் மோடில் இருக்கலாம். 
 
கடைசி வாய்ப்பாக தான் உங்கள் கருவி நிஜமாகவே காணாமல் போயிருக்கலாம். இந்த இரண்டு நிகழ்வுகளில் எதுவாக இருப்பினும் சரி, உங்களின் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தாலும் சரி அதை ரிங் செய்ய வைத்து அதன் இருப்பிடத்தை கண்டறிய ஒரு மிக எளிமையான வழி இருக்கிறது. அதை பற்றிய விளக்கப்படங்களுடனான வழிமுறைகளை பற்றிய தொகுப்பே இது.!
வழிமுறை #01 கணினியில் ப்ரவுஸரை ஓபன் செய்து ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை #02 அடுத்து ஆண்ட்ராய்டு கருவியில் பயன்படுத்தும் ஜிமெயில் அக்கவுன்ட் கொண்டு லாக்-இன் செய்ய வேண்டும்.


வழிமுறை #03 வழிமுறை #01இங்கு உங்களது அக்கவுன்டில் இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளை உங்களால் திரையில் பார்க்க முடியும்.


வழிமுறை #04 அடுத்து திரையில் ரிங், லாக் அன்டு இரேஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும்.

வழிமுறை #05 ரிங் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தவுடன் உங்களது போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் ஆகும்.

பின்குறிப்பு : செயல்திறன்மிக்க மொபைல் டேட்டா அல்லது வைஃபை இணைப்பு இல்லாத மற்றும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த கூகுள் டிவைஸ் மேனேஜர் செயல்பாடாது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக