ஞாயிறு, 16 ஜூலை, 2017

நம்பிக்கை இருந்தால் நல்லது.

நம்பிக்கை


எல்லாம் ஒழுங்காக நடக்க,
நீ நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.


எதுவுமே ஒழுங்காக
நடக்காதிருக்கும் போதும், நீ
தைரியமாக வாழ்ந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !



நீ நினைப்பதெல்லாம் உனக்கு நடக்க நீ பலமாக உணர்ந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .


நீ நினைக்காத பயங்கரங்கள் உனக்கு நடந்தாலும் நீ
அசராமலிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !



உற்றாரும் பிறரும் உனக்கு உதவி செய்ய, நீ நிதானமாக இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .


உனக்கு உதவ யாருமே தயாராக இல்லாத சமயத்திலும் நீ பக்குவத்தோடிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !


எல்லோரும் உன்னைக்
கொண்டாட, நீ சந்தோஷமாக இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .


எல்லோரும் உன்னை
அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !



உன் முயற்சிகளெல்லாம்
வெற்றியடைய நீ அழகாக
திட்டமிட்டால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .


உன்னுடைய எல்லா முயற்சிகளும் தோல்வியடைய, அதிலிருந்து பாடம் கற்று நீ முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !


எல்லோரும் உனக்கு
நம்பகமாக நடக்க, நீ
தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .


உனக்கு வேண்டியவரெல்லாம்
உன் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க
நீ தெளிவான வழியில் சென்றால்

அதன் பெயரே நம்பிக்கை ! ! !
உன்னிடத்தில் எல்லாம் இருக்க, நீ எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .


உன்னிடத்தில் எதுவுமே
இல்லாத பக்ஷத்தில், நீ எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல் இருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !


உனக்கு நம்பிக்கை இருக்கிறதா ???

நம்பிக்கை இருந்தால் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக