புதன், 12 ஏப்ரல், 2017

'TET' தேர்வுக்கு இருவகை 'ஹால் டிக்கெட்'

ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வுக்கு, இரு வகையான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப் பட்டுள்ளன. தமிழகத்தில், 2010ல், அமலான கட்டாய கல்விச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 

மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29 மற்றும், 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலித்ததில், பல விண்ணப்பங்களில் புகைப்படம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இரு வகையான ஹால் டிக்கெட்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இணையதளத்தில், அதன் விவரங்களை தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக