தமிழகத்தில் விரைவில் அமலாகவுள்ள, 'டிஜிட்டல்' சேவையில், 125 ரூபாய்க்கு,
200 சேனல்களை வழங்க, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திற்கு,
டிஜிட்டல் ஒளிபரப்பிற்கான உரிமத்தை, மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான,
'டிராய்' வழங்கியுள்ளது.
அதே நேரத்தில், மூன்று மாதத்திற்குள், அதாவது ஜூலை,
17க்குள், வாடிக்கையாளர்களுக்கு, 'செட் - டாப் பாக்ஸ்'களை வழங்காவிட்டால்,
டிஜிட்டல் உரிமம் ரத்தாகி விடும் என, எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 70
லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்ய, அரசு கேபிள் நிறுவனம்,
'டெண்டர்' கோரியுள்ளது. டிஜிட்டல் சேவை மூலமாக, தனியார் நிறுவனங்களை விட,
அதிக சேனல்களை தரவும் முடிவு செய்துள்ளது. அதனால், தற்போதைய கட்டணம், 70
ரூபாய், இரு மடங்காக உயர்கிறது.
இது தொடர்பாக, அரசு கேபிள் அதிகாரிகள் கூறியதாவது: கேபிள்
வாடிக்கையாளர்களுக்கு, 130 ரூபாய் மாத கட்டணத்தில், குறைந்தது, 100
சேனல்கள் தர வேண்டும் என, டிராய் அறிவித்து உள்ளது. அதற்கு மேல் சேனல்களை
விரும்பினால், கூடுதல் செலவு செய்து, அதிக சேனல்களை பெறலாம். அதன்
அடிப்படையில், அரசு கேபிள் வாடிக்கையாளர்களுக்கு, 130 ரூபாய்க்குள் குறைந்
தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்; அதனால், 125 ரூபாயாக
நிர்ணயிப்போம். அதில், 200 சேனல்களை பார்க்கலாம்; 'செட் - டாப் பாக்ஸ்'
இலவசமாக தருவோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக