திங்கள், 15 மே, 2017

BE Cutoff will hike!

பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கணித்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.இதில், கணிதத்தில் 3,656 மாணவர்களும், இயற்பியலில் 187 பேரும், வேதியிய லில் 1,123 பேரும், 200-க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் மதிப் பெண்ணை கணக்கிடுவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங் களின் மதிப்பெண் பார்க்கப்படுகிறது.
அதில் கணிதத்துக்கு 50 சதவீதமும், இயற்பியலுக்கு 25 சதவீதமும், வேதி யியலுக்கு 25 சதவீதமும் வெயிட்டேஜ் கொடுக்கிறார்கள். அதற்கேற்ப இந்த 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கட் ஆஃப் கணக்கீட்டுக்கு மாற்றப் படும். கணிதத்துக்கு 50 சதவீத வெயிட்டேஜ் இருப்பதால் கட் ஆஃப் கணக்கீட்டில் பெரும்பங்கு உண்டு.கடந்த ஆண்டு கணிதத்தில் 3,361 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 295 அதிகரித்துள்ளது. அதேபோல், சென்ற ஆண்டு இயற்பியலில் வெறும் 5 பேர் மட்டுமே 200 மதிப்பெண் பெற்றிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக 182 பேர் சென்டம் அடித்துள்ளனர். அதேநேரத்தில் வேதியியலில் 200-க்கு 200 வாங்கியவர்களின் எண்ணிக்கை 1,703-லிருந்து 1,123 ஆக குறைந் திருக்கிறது. இருப்பினும், கணிதம், இயற்பியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக் கான கட் ஆஃப் மதிப்பெண் கணிச மாக அதிகரிக்கும் என்று கல்வி யாளர்கள் கணிக்கிறார்கள்.
இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறும்போது, “கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் கூடுதலாக 182 பேரும், கணிதத்தில் 295 பேரும், 200-க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதன் காரணமாக, பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கவே செய்யும். 195 முதல் 200 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண்ணில் 0.25 சதவீதமும், அதே போல், 194.75 முதல் 185 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண்ணில் 0.5 சதவீத மும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.அண்ணா பல்கலைக்கழக பொறி யியல் மாணவர் சேர்க்கை மற்றும் நுழைவுத்தேர்வுகள் முன்னாள் இயக்கு நரும், கல்வியாளருமான பேராசிரி யர் பி.வி.நவநீதகிருஷ்ணன் கூறும் போது, “பொறியியல் கட் ஆஃப் மதிப் பெண்ணுக்கு கணித மதிப்பெண்ணுக் குத்தான் பாதி வெயிட்டேஜ் கொடுக் கப்படுகிறது. எஞ்சிய பாதி இயற்பிய லுக்கும், வேதியியலுக்கும் கொடுக் கிறார்கள். எனவே, கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் சென்டம் வாங் கியவர்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதால் கட் ஆஃப் மதிப்பெண் நிச்சயம் உயரும்” என்றார்.கணிதம், இயற்பியல் பாடத்தில் சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கட் ஆஃப் மதிப்பெண் நிச்சயம் உயரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக