திங்கள், 8 மே, 2017

மீன்வள படிப்பில் சேர மே 10 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

          மீன்வள படிப்புகளில் சேர மே 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
     இதுதொடர்பாக மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழுதலைவர் இன்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில்,
''தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவியல் (பிஎப்எஸ்சி) படிப்பில் 110 இடங்களும், இளநிலை மீன்வள பொறியியல் படிப்பில் (பிஇ) 20 இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளில் 2017-18-ம் கல்வி ஆண்டில் சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.tnfu.ac.in) பயன்படுத்தி மே 10 முதல்ஜுன் 10-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட வேண்டும். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படாது.
 
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜுன் 10-ம் தேதி ஆகும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 04365-240558 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக