திங்கள், 8 மே, 2017

நேற்று நடைபெற்ற நீட் தேர்வு எப்படி இருந்தது?

    நீட் தேர்வில் இடம்பெற்ற கேள்விகளில் பெரும்பாலானவை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்றிருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். 
       மருத்துவ சேர்க்கைக்காக நாடு முழுவதும் பொதுவான நுழைவு தேர்வான தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 11,35 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தை பொருத்தவரை 8 நகரங்களில் தேர்வு நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தேர்வை தமிழகத்தை சேர்ந்த 88,000 மாணவர்கள் எழுதினர். தேர்வு கூடத்துக்கு செல்வதற்கு முன்னர் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கேள்வித்தாள் குறித்து மாணவர்கள் கூறுகையில், கணக்கு, வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் இயற்பியல் பாடப்பிரிவில் இடம்பெற்ற கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. வேதியியல், உயிரியல் பிரிவுகள் எளிதாக இருந்தன.
 
கணக்கு பிரிவும் வொர்க் அவுட் செய்து போடுவது போன்று எளிதாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாடப்பிரிவுகளிலேயே கேட்கப்பட்டன.

இதனால் மெட்ரிக் பாடப்பிரிவு மாணவர்களுக்கு சற்று கடினமாக இருந்தது. எனினும் ஒரு சில மாணவர்கள் 11, 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களிலிருந்து கேட்கப்பட்டதாக தெரிவித்தனர். 3 மணிநேர போதுமானதாக இருந்தது என்று மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக