தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க
மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம்
விண்ணப்ப விநியோகம் விரைவில்
தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 12-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பொது
நுழைவுத் தேர்வை ('நீட்') நாடு முழுவதும் 11.35 லட்சம் மாணவர்கள்
எழுதுகின்றனர்; தமிழகத்தில் மட்டும் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
எழுதுகின்றனர்.
சென்னை, திருச்சி, மதுரை உள்பட அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய 85 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடடுக்கு உரிய 15 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகிய அனைத்துக்கும் முதன்முறையாக நீட் தேர்வு அடிப்படையிலான மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
அறிவிக்கை எப்போது?: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 31,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர். எனினும், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகே, விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்றும் விண்ணப்ப விநியோகம் குறித்து அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக