செவ்வாய், 2 மே, 2017

இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு திருச்சியில் 20–ந்தேதி தொடங்குகிறது .

இந்திய விமானப்படைக்கு தேவையான விமானப்படை வீரர்கள் தேர்வு திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வரும் 20 மற்றும் 22–ந்தேதிகளில் நடக்கிறது. 1997–ம் ஆண்டு ஜூலை 7–ந்தேதி முதல் 2000–ம் ஆண்டு டிசம்பர் 20–ந்தேதி வரை பிறந்த திருமணம் ஆகாத இந்திய ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

பிளஸ்–2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஆங்கிலத்திலும் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றதற்கான உண்மை சான்றிதழை கொண்டு வரவேண்டும். கல்லூரிகளில் உண்மை சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தால், நகல் சான்றிதழில், தேர்வாளர்கள் தான் கையொப்பம் போட்டிருப்பதுடன், பள்ளி, கல்லூரி முதல்வரிகளிடமும் கையொப்பம் வாங்கி வரவேண்டும்.

மாவட்ட வாரியாக... 

வரும் 20–ந்தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் கரூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடக்கிறது.

22–ந்தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், காஞ்சீபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடக்கிறது.

இணையதள முகவரி 

கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.gov.in இணையதள முகவரி அல்லது 044–2239 0561 மற்றும் 044–2239 5553 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக