புதன், 10 மே, 2017

பொறியியல் சேர்க்கை: ஒரு வாரத்தில் 33,769 மாணவர்கள் பதிவு.

பொறியியல் படிப்பில் சேருவதற் காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33,769 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து உள்ளனர்.தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்உள்ளன.
இவற்றில் சுமார் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.முதல் நாளிலேயே 4,786 பேர் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 2-வது நாளில் 6,860 பேரும், 3-வது நாளில் 6,608 பேர், 4-வது நாளன்று 5,150 பேர், 5-வது நாளில் 4,262 பேர், 6-வது நாளில் 4,265 பேர், 7-வது நாளில் 1,838 பேர் என கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 33,769 பேர் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.ஆன்லைன் பதிவு மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்களுடன் ஜுன் 3-ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை சென்றடைய வேண்டும்.

இதைத்தொடர்ந்து, மாணவர் களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு ஜுன் 20-ம் தேதி அவர்களுக்கு ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு ஜுன் 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 27-ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக