தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்சேர விண்ணப்பங்கள்
வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா
தெரிவித்தார்.
பூர்த்தி செய்த விண்ணப்பங் களை பிளஸ் 2 தேர்வு முடிவு
வெளியான 10 வேலை நாட் களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 82 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 162 அரசு
உதவி பெறும் கலை அறிவி யல் கல்லூரிகளும், 1,400-க்கும் மேற்பட்ட தனியார்
கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஏ. பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ
உள்ளிட்ட கலை, அறிவியல், இலக் கியம் சம்பந்தப்பட்ட இளங்கலை, முதுகலை
படிப்புகளுக்கான விண் ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கை ஏற்பாடு குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பேரா சிரியை ஜெ.மஞ்சுளாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகளைப் பொருத்தவரையில் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க் கைக்கென தனி குழு அமைக்கப் பட்டு அதன்மூலமாக சேர்க்கைப்பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், பல அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.48. கடந்த ஆண்டு ரூ.27 வசூலிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களைபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 வேலை நாட்களுக்குள் அந்தந்த
கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண் டும். மாணவர்கள்வெவ்வேறு படிப்புகளுக்கு
தனித்தனி விண் ணப்பம் போட வேண்டியதில்லை. ஒரு விண்ணப்பம் போட்டால் போதும்.
வெளிப்படையான கலந் தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு (பிபிஏ, பிகாம், பிசிஏ) அதிக தேவை இருக்கலாம். அத்தகைய படிப்புகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கலாம். அது போன்ற சூழ்நிலையில், தற்காலிக ஏற்பாடாக, கல்லூரி நிர்வாகம், இணைப்பு அங்கீகாரம் அளித் துள்ள பல்கலைக்கழகத்திடம் அனுமதி வாங்கிவிட்டு தேவைக் கேற்ப இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம்.இவ்வாறு மஞ்சுளா கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக