வியாழன், 18 மே, 2017

பத்தாம் வகுப்பு தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், வெள்ளிக்கிழமை (மே 19) முதல் திங்கள்கிழமை (மே 22) மாலை 5.45 மணி வரை தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல் கட்டணம்:-
பகுதி 1 மொழிப் பாடம் ரூ.305
பகுதி 2 மொழி (ஆங்கிலம்) ரூ.305
பகுதி 3 கணிதம், அறிவியல் மற்றும்
சமூக அறிவியல் ரூ.205
பகுதி 4 விருப்ப மொழிப் பாடம் ரூ.205
செலுத்தும் முறை: மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக