புதன், 5 ஏப்ரல், 2017

சர்வதேச யோகா: குன்னூர் ஆசிரியை தேர்வு


குன்னுார் யோகா ஆசிரியை சுமதி, சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், சுமதி, 38; வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய உயர்நிலைப் பள்ளி யோகா ஆசிரியை. 
 
சமீபத்தில், கோவையில் நடந்த மாநில யோகா போட்டியில், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான நான்கு பிரிவுகளில், தங்கம் வென்றார். இந்நிலையில், சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு, இவருக்கு கிடைந்துள்ளது. சுமதி கூறுகையில், ''வரும், 26ம் தேதி, அந்தமானில் நடக்கும் தேசிய போட்டியிலும், மே, 27ல், சிங்கப்பூரில் நடக்கும் சர்வதேச போட்டியிலும் பங்கேற்க உள்ளேன்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக