புதன், 5 ஏப்ரல், 2017

கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கிறது மின் வாரியம்.

'செக்யூரிட்டி டிபாசிட்' என அழைக்கப்படும், காப்பு வைப்பு தொகை, கூடுதலாக வசூலிக்கப்படுவது குறித்த விபரத்தை, மின் வாரியம் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளது. 
தமிழ்நாடு மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும் போது, 'செக்யூரிட்டி டிபாசிட்' என்ற பெயரில், குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும். மின் பயன்பாட்டை பொறுத்து, வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த இணைப்புகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, செக்யூரிட்டி டிபாசிட் மாற்றம் செய்யப்படும். நடப்பு நிதியாண்டு துவங்கியதை அடுத்து, கூடுதல் செக்யூரிட்டி டிபாசிட் வசூல் விபரத்தை, மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 



இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் பயன்பாடு அதிகம் உள்ள வீடுகளில், கூடுதலாக செக்யூரிட்டி டிபாசிட் எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற விபரம், மின் கட்டண ரசீதில் தெரிவிக்கப்படும். அந்த தொகை எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்ற விபரம், மின் வாரிய இணையதளத்தில் உள்ளது. கூடுதல் தொகையை, மூன்று தவணையில் செலுத்தலாம். இந்த சலுகையை பெற விரும்புவோர், அந்த விபரத்தை, முன் கூட்டியே பிரிவு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக