புதன், 5 ஏப்ரல், 2017

மலிவு விலை சேவைகள்! அடுத்த அதிரடியில் ஜியோ?

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இலவசமாக ஜியோ சேவையை வழங்கிவந்தது. மார்ச் 31 முதல் இந்த இலவச சேவை முடிந்து மலிவு விலையில் ஜியோ சேவை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை அதிகரிக்க, மலிவு விலை சேவை 12 முதல் 18 மாதங்கள் தொடர்ந்து அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தான்டு ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சேவையை அறிமுக்கப்படுத்தியது. இந்திய தொழில் தொடர்புத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஜியோ சேவை ஏற்படுத்தியது. மார்ச் 31 வரை ஜியோவில் இலவச கால் மற்றும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஜியோ சேவைகளை இனி பெற மாதக் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜியோ ப்ரைமில் இணைய ஏப்ரல் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜியோ மலிவு விலை சேவைகள் அடுத்த ஒரு வருடத்துக்கு மேல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் 60 சதவீத வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஜியோ நிறுவனம், 12 முதல் 18 மாதம் வரை மலிவு விலை சேவைகளை தொடர்ந்து வழங்கலாம் என தொழிநுட்ப வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, முன்னணி தொழில் தொடர்பு சேவையாக வளர்ந்து வரும் ஜியோ, மலிவு விலை சேவைகளை தொடர்ந்து வழங்கி தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 நிதியாண்டின் முடிவில் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ கொண்டிருக்கும் என அந்நிறுவனத்தின் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக