வியாழன், 6 ஏப்ரல், 2017

தைராய்டு எப்படி வருது தெரியுமா? இதோ அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்....

எப்படி வருகிறது:

1.. தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் வரும்.
2.. பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்சனைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்சனை வரலாம்.

3.. உடலில் அயோடின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்சனை ஏற்படும்.

எப்படி தப்பிப்பது?

1.. உடற்பயிற்சி மூலமும் தைராய்டு பிரச்சனையை போக்கலாம். வாக்கிங் செல்வது அவசியம்.

2.. சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

3.. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

4.. உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம்.

5.. தைராய்டு பிரச்சனையை பொறுத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

6.. பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

7.. கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம்.

8.. முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக