புதன், 10 மே, 2017

விக்கிப்பீடியாவில் ஒரு இலட்சம் கட்டுரைகள் எட்டியுள்ள இந்நேரத்தில் தமிழ் உலகம் நம்மை கவனித்துக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொண்டு செயல்படவேண்டிய தருணம் இது..

1. வலைதளங்கள், வாட்சாப்புகளில் வந்த செய்திகளை அப்படியே நகலெடுத்து ஒட்ட வேண்டாம்..

2. கலைக்களஞ்சியத்தை நாம் தொகுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற பெருமித நினைவுடன் தரமான விக்கிப்பீடியாவுக்கேற்ற கட்டுரைகளைப் படையுங்கள்.

3. விக்கிப்பீடியாவைப் புரிந்துகொள்ளுங்கள். தரமற்ற,
ஆதாரங்கள் அற்ற, பிற தளங்களிலிருந்து நகலெடுத்த  விக்கிநடைக்கேற்ப இல்லாத கட்டுரைகள் நீக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என மனதில் இறுத்திக்கொள்ளுங்கள்.          

4. கட்டுரைத் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கும்பொழுது
ஆங்கிலத் தலைப்புகள்,
புள்ளிவைத்தத் தலைப்புகள், தன்னம்பிக்கைத் தலைப்புகள்,
வினாக்கள் போன்ற தலைப்புகள், அடைமொழிகள் சேர்த்த தலைப்புகள் போன்ற தலைப்புகளைத் தவிர்க்கவும். 

5. நீங்களாக ஆய்வு செய்த உங்கள் சொந்த எண்ணங்கள், கருத்துகளைக் கட்டுரைகளாக எழுதாதீர்கள்..

6. நம்பகத்தகுந்த செய்திகளை சான்றுகளுடன் எழுத மறக்காதீர்கள்..

7. நூல்கள், தனி நபர்கள் குறித்த கட்டுரைகளை எழுதும்போது அது குறிப்பிடத்தக்க தகுதியிடையதா?/ வரா எவ்வகையில் பிரபலம் அடைந்துள்ளதா?/ ளாரா? என உணர்ந்து பதிவேற்றுங்கள்.

8. விக்கிப்பீடியாப் பற்றி நன்கு புரியும் வரை மணல்தொட்டியில்  எழுதிப்பழகுங்கள்.

9.  இடப்பக்கமுள்ள  தேர்ந்தெடுத்த கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன  எனப்பாருங்கள்.

10. அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எந்தக் கட்டுரை புதிதாகத் தொடங்கப்பட்டது, எவை நீக்கப்பட்டது ? எவை தொகுக்கப்பட்டுள்ளது?  என அறியுங்கள்..

11. உங்கள் பேச்சுப்பக்கத்தில் உங்களுக்குத் தரப்படும் உதவிகள், அறிவுரைகள் என்ன என்பதைக் கவனியுங்கள். அதற்கேற்ப தொகுத்தலில் ஈடுபடுங்கள்..

12. தேடு பெட்டியில் தலைப்புகளை இட்டுத் தேடியபின் அக்கட்டுரை இருக்கிறதா என அறிந்து அதற்கேற்ப  செயல்படுங்கள்.. ஏற்கனவே உள்ள கட்டுரையை நீங்கள் மீண்டும் உருவாக்குவது நீக்கப்படலாம். உங்கள் நேரமும் உழைப்பும் வீணாகும்..

13. பயனர் கணக்குத் தொடங்கியவுடன் உங்கள் மின்னஞ்சலை உறுதிப்படுத்தவும்.

14. உங்கள் பக்கத்தின் மேலுள்ள  தொகு என்ற தத்தல் மூலம் நீங்கள் கட்டுரையைத்  தொகுக்கலாம்..

15..  இப்பயிற்சியில் குறிப்பாக ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள அறிவியல் சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்து தமிழ்விக்கியில் பதிவேற்றுதல்  என்பது நல்ல தரமான கட்டுரைகளை நாம்  வழிமுறையாகும்.. இதன் மூலம் படங்கள் சான்றுகள் ஆகியவற்றை நீங்கள்  தேடாமல் ஆங்கில விக்கியில்  உள்ளதை அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம்.

16. நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை எந்த பகுப்பில் (category) வரும் என அதனைக் குறிப்பிட மறக்காதீர்கள்..

17. விக்கிப்பீடியாவில் சான்றுகளைச் சேர்க்க புரூவ் இட்,  பகுப்புகளைச் சேர்க்க விரைவுப்பகுப்பி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இவை உங்கள் விருப்பத்தேர்வுகள்/ கருவிகள்/ தொகுத்தல் கருவிகளில் இருக்கும் இவற்றைத் தேர்ந்தெடுத்து  சேமித்துக்கொள்ளுங்கள்..

18..  தொகுத்தல் உதவி வேண்டுமெனில் உங்கள் பேச்சுப்பக்கம்,  ஒத்தாசைப்பக்கம், ஆலமரத்தடி ஆகியவற்றில் கேளுங்கள்.  மறக்காமல் பக்கத்தின் மேலுள்ள பேனாக்குறியைச் சொடுக்கிக் கையொப்பமிடுங்கள்

19. கட்டுரைகள் குறித்த உங்கள் கருத்துகளை அந்தக்கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் பதிந்து கையொப்பமிடுங்கள்..

20. விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் கட்டுரை எழுத வந்தமைக்கும், தமிழ்ச் சமூகதிற்குச் சேவையாற்ற வந்தமைக்கும், தமிழர் வாழ்வியலை வரலாற்றுப்பதிவாக வருங்காலச் சமூகத்திற்கு ஆவணப்படுத்த வந்தமைக்கும்  எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்புடன்
பார்வதிஸ்ரீ                                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக