ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30லும் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, மார்ச், 23ல், முடிந்தது.
இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, 8.47 லட்சம் விண்ணப்பங்கள் விற்றன. அவற்றில், இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு, இரண்டு லட்சத்து, 37 ஆயிரத்து, 293 பேர்; பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, ஐந்து லட்சத்து, இரண்டாயிரத்து, 964 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா மேற்கொண்டு வருகிறார். தேர்வுக்கு, 1,861 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 598 மையங்கள், ஏப்., 29 தேர்வுக்கானவை. தற்போது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமையில், கண்காணிப்பாளர், பறக்கும் படையினருக்கான நியமனம் நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக