செவ்வாய், 11 ஏப்ரல், 2017

'கியூசெட்' தேர்வுக்கு 4 நாட்களே அவகாசம்.

மத்திய பல்கலைகளில் படிப்பதற்கான, 'கியூசெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நான்கு நாட்களே அவகாசம் உள்ளது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, மத்திய பல்கலைகளில், பட்டம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க, 'கியூசெட் என்ற, பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு, மே 17, 18ல் நடக்கிறது.
 

இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச் 20ல் துவங்கியது; வரும், 14ம் தேதி முடிகிறது. இதற்கு இன்னும், நான்கு நாட்களே உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காதோர், இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக