செவ்வாய், 11 ஏப்ரல், 2017

TNPSC : சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, ஏப்., 17 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, ஏப்., 17 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு துறைகளில் காலியாக உள்ள, சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்ய, 2016 நவம்பரில், எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. 
 
இதில், தகுதி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கி உள்ளது. தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர் உள்ளோருக்கு, ஏப்., 17 முதல், 24 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக