வியாழன், 6 ஏப்ரல், 2017

வீட்டு வாடகை ரசீதைக் காட்டி வருமான வரியை குறைக்கிறீர்களா... வருகிறது சிக்கல்!

        மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்து வாடகை வீட்டில் இருப்போர் அதிகம். இவர்கள் மாதா மாதம் கொடுக்கும் வாடகைக்கு ரசீது வாங்கி,       அதை ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் (HRA) மூலம் வருமான வரி விலக்குப் பெறுவதற்கு பயன்படுத்துவது வழக்கம். இதில் முறையற்ற ரசீதுகளை சமர்பித்து வரி விலக்கு பெறுவோருக்கு கெடுபிடிகளை கொண்டு வரவுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஏனென்றால், பலர் வருமான வரியில் இருந்து தப்பிக்க சட்ட விரோதமான ரசீதை செலுத்தி விலக்குப் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் மூலம் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வரை வருமான வரியில் இருந்து விலக்குப் பெற முடியும்.
போலியான ரசீதுகளை சமர்ப்பித்து இந்த வருமான வரி விலக்குப் பெறுவதை தடுக்க, அரசு சீக்கிரமே கெடுபிடிகளைக் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக