வெள்ளி, 7 ஏப்ரல், 2017

Jio- க்கு ட்ராய் வைத்த செக்...! முக்கிய அறிவிப்பு வெளியீடு.



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி 'ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை' அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.
இதன்படி, ஜியோ பயனர்கள் 303 ரூபாய் செலுத்தி அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச இன்டர்நெட் சேவை தொடரலாம் என்று அந்நிறுவனம் கூறியிருந்தது. இந்த ஆஃபரைப் பெற வரும் 15-ம் தேதிக்குள் 99 ரூபாய் மற்றும் 303 ரூபாய் என இரு ரீசார்ஜுகளை செய்ய வேண்டும் என ஜியோ அறிவுறுத்தி இருந்தது. இதில், 'ஜியோ ப்ரைம்' வாடிக்கையாளராக மாற 99 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI), ஜியோ-வின் இந்த 'சர்ப்ரைஸ் பேக்கை' கைவிடுமாறு கூறியுள்ளது. இதையடுத்து, ஜியோ நிறுவனம், இந்த 'சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர்' கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 31-ம் தேதி முதல் இன்று வரை இந்த ஆஃபரை சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு, மூன்று மாத குறிப்பிடப்பட்ட சேவை கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது ஜியோ நிறுவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக