ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

SRM நுழைவுத்தேர்வு ஏப்., 25 வரை அவகாசம்.


எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நுழைவு தேர்வுக்கு விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஏப்., 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம்., பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எஸ்.ஆர்.எம்., பல்கலையின் பி.டெக்., - எம்.டெக்., படிப்புகளில் சேர, எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எம்.பி.ஏ.,வுக்கு, எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.எம்., என்ற நுழைவு தேர்விலும், மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு, எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.எச். என்ற நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.



இந்த தேர்வுகள், ஏப்., 1ல் துவங்கின; ஏப்., 30 வரை, நாடு முழுவதும், 118 மையங்களிலும், மத்திய கிழக்கு நாடுகளில், ஐந்து மையங்களிலும் நடக்கின்றன. தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் படி, சென்னை, அரியானா, ஆந்திரா, அமராவதி ஆகிய இடங்களில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பல்கலையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். 


இதற்கான விண்ணப்ப பதிவு, மார்ச், 21ல் துவங்கியது. இதுவரை, 1.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஏப்., 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 30 வரை தேர்வு நடக்கும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, மே மாதம் கவுன்சிலிங் நடத்தி, 'அட்மிஷன்' வழங்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக