சனி, 8 ஏப்ரல், 2017

புதிய ரூ.200 நோட்டு: வங்கிகளில் வழங்க முடிவு.

ஏ.டி.எம்.,களில் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, புதிய, 200 ரூபாய் நோட்டுகளை, வங்கி கிளைகள் மூலம் நேரடியாக வழங்க, ரிசர்வ்  வங்கி திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி, கடந்த ஆண்டு, நவ., 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார்.இதையடுத்து, புதிதாக 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால்,இந்த புதிய நோட்டுகளுக்கு ஏற்ப, ஏ.டி.எம்.,கள், மாற்றியமைக்க வேண்டி இருந்தது. இதனால், பல நாட்கள், ஏ.டி.எம்.,கள்முழுமையாக முடங்கின. 
நிலைமை இப்போது சீராகி, ஏ.டி.எம்.,களில், 2,000 - 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. எனினும், சில பகுதிகளில், ஏ.டி.எம்.,கள் செயல்படாமல், மக்கள், பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ரூ. 200 நோட்டு

மேலும், சில்லரை தட்டுப்பாட்டை போக்க, புதிதாக, 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதேபோல், 10, 20, 50 நோட்டுகளையும்,புதிதாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நோட்டுகளுக்கு ஏற்ப, ஏ.டி.எம்.,களை மாற்றுவதற்கு, குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்.அதனால், இந்த நோட்டுகளை, வங்கி கிளைகள் மூலம், மக்களிடம் நேரிடையாக வழங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
My Blogger Tricks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக