வியாழன், 6 ஏப்ரல், 2017

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!

🔵   இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ஜியோ. இதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும், அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டுடன் இதன் இலவச ஆஃபர் முடிவதாக இருந்தது. இதையடுத்து மார்ச் 31-ம் தேதி வரை (இன்று) இதன் இலவச ஆஃபர் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து இலவச ஆஃபர் முடிந்த பிறகு, ரூ. 99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் ஆஃபர்களை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறி இருந்தது.

🔵  இதனையடுத்து, ஜியோ இலவச ஆஃபர் இன்றுடன் முடியும் நிலையில், ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராவதற்கும் இன்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது. இந்நிலையில், வருகின்ற 15-ம் தேதி வரை ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது. மேலும், ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) + ரூ.303 செலுத்தினால் (15-ம் தேதிக்குள்) அடுத்து மூன்று மாதத்துக்கு ஜியோ முற்றிலும் இலவசம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலனுக்காக, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ கூறியுள்ளது.

🔵   மேலும், தற்போது வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள், ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக