சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில், நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும்.
மனித இனம் தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம் உணவு உள்பட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் நாகரிகமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்ததும், மனிதர்களாகிய நாம் இயற்கையை எதிர்த்து வாழ முயற்சி செய்து வருகிறோம். மின்சாரம் என்ற ஒன்று மனிதனுக்கு தெரியாத வரை மனிதர்கள் இரவு 7, 8 மணிக்கெல்லாம் தூங்கச் சென்றுவிட்டனர்.